×

மகளிரணி புரவலர் நூர்ஜஹான் மரணம் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

திண்டுக்கல்: திமுக மாநில மகளிர் அணி புரவலர் நூர்ஜஹான்பேகம் (80) உடல்நலக்குறைவால், மதுரை தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். இவரது உடல் சொந்த ஊரான திண்டுக்கல்லுக்கு நேற்று முன்தினம் கொண்டு வரப்பட்டது. நேற்று மாலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறுகையில், ‘‘பெண்கள் அரசியலுக்கு வரத் தயங்கிய காலத்திலேயே பல மேடைகளில் முழக்கமிட்டவர். அவரது இழப்பு கட்சிக்கும் மிகப்பெரிய இழப்பு,’’ என்றார். துணை பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி, கனிமொழி எம்.பி., முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Nur Jahan ,MK Stalin ,resignation ,death , Woman's patron Nur Jahan, death, MK Stalin, Anjali
× RELATED இதுவரை எடுத்த நடவடிக்கைகளைவிட...